2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ்.மாவட்டத்தில் சிறுவர் துஷ்பியோகங்களை கட்டுப்படுத்துவதற்கு புதிய சிறுவர் கழகங்கள் திறந்து வைப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                              (ரஜனி) 
சிறுவர் பாதுகாப்பும் பெற்றோர் திறன் விருத்தி தொடர்பான விழப்புணர்வு கருத்தரங்கின் போது சர்வோதய நிறுவனத்தின் கொழும்பு மாவட்ட இணைப்பாளர் மாலினி சிறுவர் கழகங்களை திறந்து வைத்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் தொடர்பான கருத்தரங்கு சாவகச்சேரி கேற்பேலி மற்றும் சுழிபுரம் காட்டு புலம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் சர்வோதயம் நிறுவனமும் இணைந்து சாவகச்சேரி மற்றும் சுழிபுரம் கிராம அபிவிருத்தி நிலையத்தில் நடாத்திய சிறுவர் பாதுகாப்பும், பெற்றோர் திறன் விருத்தியும் விழிப்புணர்வு கருத்தரங்குகளில் அப்பகுதி பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களையும், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டனர்.

பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாது வேலைக்கு அமர்த்துதல் மற்றும் சிறுவர் பாதுகாப்பின்றி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றமை தொடர்பாக சர்வோதய நிறுவனத்தின் கொழும்பு மாவட்ட அதிகாரி மாலினி மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உளவள உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவை அமைச்சின் கிளிநொச்சி மாவட்ட உளவள உத்தியோகத்தர்கள் பலர் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X