2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அரச சேவைப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு வதிவிடப் பயிற்சி

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 20 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், ரஜனி)


அரச சேவைப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கான வதிவிடப் பயிற்சி நெறி இன்று திங்கட்கிழமை யாழ் மாவட்டச் செயலத்தில் ஆரம்பமாகியது.

யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சிநெறியில் புதிதாக நியமனம் பெற்ற 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

நாடுபூராகவும் இருந்து தெரிவு செய்யப்பட்ட இவர்களுக்கு முற்கட்டமாக கிராம மட்டத்தில் இருந்து பயிற்சிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், 'கடந்த காலத்தில் தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசத்தில் தமிழர்களும் சிங்கள மக்கள் வாழக்கின்ற இடங்களில் சிங்களவர்களும் கடமையாற்றும் நிலை இருந்தது.

தற்போது அந்த நிலைமாறி அனைவரும் அனைத்து இடங்களிலும் சேவையாற்றுக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X