2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அரசியல் தீர்வு குறித்த தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பில் அமெரிக்க அதிகாரிகளுக்கு த.தே.கூ எடுத்துரை

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

அமெரிக்க தூதுவராலய அதிகாரிகள் மூவர் அடங்கிய குழவினருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று யாழ்.நகரில் இன்று நடைபெற்றதாக த.தே.கூ.வின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பாகவும் தமிழ் மக்கள் அண்மைக்காலமாக எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகள் மற்றும் காணி சுவீகரிப்பு தொடர்பாகவும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதாக சிறிதரன் எம்.பி குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்ததாக சிறிதரன் எம்.பி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க தூதுவராலய அதிகாரிகள் குழவினர் 4ஆம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள அமெரிக்க கோனருக்கு சென்று அங்குள்ள நிலமைகள் தொடர்பாகவும் யாழ்.குடாநாட்டின் மீள்குடியேற்றம் தொடர்பாக யாழ்.மாவட்டச் செயலரையும் சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X