2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் மீட்கப்பட்ட தலையற்ற சடலத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் புதைக்க நீதிமன்றம் உத்தரவு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                       (ஜெ.டானியல்)
மன்னார் கடற்கரையோரத்திலிருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் தலையற்ற சடலத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் அரச செலவில் புதைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

கடந்த 17ஆம் திகதி மன்னார் கடற்கரையோரத்தில் அழுகிய நிலையில் காணப்பட்ட இச்சடலத்தை மன்னார் பொலிஸார் மீட்டனர்.

சடலம் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மருத்துவ பரிசோதனை நிறைவடைந்த நிலையில் இனம்; காணப்படாத சடலத்தை அரச செலவில் புதைத்து விடுமாறு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் மிகவும் பழுதடைந்த நிலையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X