2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தொழில்தருநர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் நலன்பேணுதல் தொடர்பிலான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜனி)


தொழில்தருநர்களுக்கும் தொழிலாளர்களுக்குமிடையிலான நலனைப் பேணுவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

உதவித் தொழில் ஆணையாளர் நீலலோஜினி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தொழில் நிறுவனங்களின் தொழில்தருநர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கிடையிலான சம்பள முரண்பாடுகள், தொழில் ரீதியான பிரச்சினைகளை தீர்த்து சுமூகமான முறையில் தொழில் தருநர்களையும் தொழிலாளர்களின் நலனையும்  பாதுகாத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இதேவேளை, தொழிலாளர்களுக்கு  விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும், அரச விடுமுறைகள் தவிர்ந்த ஏனைய நாட்களின் தொழிலாளர்களின் தேவைகள் குறித்து விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும், பெண்களாயின் பிரசவ காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும், தொழிலாளர்களின் பங்களிப்பு தொகை மற்றும் ஊழியர் சேமலாப நிதியினை தகுந்த காலத்தில் செலுத்தப்படல் வேண்டும், அவ்வாறு செலுத்தப்படாத காலத்திற்கான பணத்தினை நீதிமன்றித்திற்கூடாக தண்டப்பணங்கள் அறவிடப்படுவதுடன், தொழிலாளர்களுக்கு வட்டியில்லாமல் போய்விடும்.

தண்டப்பணம் செலுத்துவதை தவிர்த்து ஊழியர் சேமலாப நிதியினை செலுத்தப்படுமாயின், தண்டப்பணம் செலுத்துவதை தவிர்க்க முடியும்.

எனவே, தொழில்தருநர்கள் தொழிலாளர்களின் பிரச்சினைகளை கவனத்தில் கொள்வதுடன் தொழிலாளர்கள், தொழில் தருநர்களுடன் சுமூகமான முறையில் தமது பிரச்சினைகளை கலந்துரையாடுவது அவசியமெனவும் யாழ்.மாவட்ட உதவித் தொழில் ஆணையாளர் இதன்போது கேட்டுக் கொண்டார். (படங்கள்: ஜெ.டானியல்)



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X