2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சர்வதேச மனிதாபிமான தினம் யாழில் அனுஷ்டிப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                           (எஸ்.கே.பிரசாத்)
சர்வதேச மனிதாபிமான தினம் இன்று செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள யு.என்.எச்.சி.ஆர் காரியாலயத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

பாக்தாத் நகரில் கொல்லப்பட்ட மனிதாபிமான பணியாளர்களை நினைவு கூரும் முகமாக  கடந்த 2008 ஆண்டு முதல் வருடம்தோறும் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி இத் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் ரம்லான் பெருநாளை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஐ.நா தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனிதாபிமான உதவி நிறுவனங்கள் ஆகியவற்றின் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

இத்தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தால் விடுக்கப்பட்டு செய்திக்குறிப்பும் வாசிக்கப்பட்டது.

இச்செய்தி குறிப்பில், 'இவ்வாண்டுக்குரிய உலக மனிதாபிமான தினமானது உலகெங்கிலும் உள்ள 100 கோடி மக்களை ஒன்று கூட்டி மிகவும் வலுவானதும் மாற்றத்தை ஏற்படுத்தக்ககூடியதுமான கருதுகோளை மேம்படுத்துவதற்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க வாய்ப்பை வழங்குகிறது. இந்தக் கருதுகோள் 'மக்களே மக்களுக்கு உதவுதல்' என்பதாகும்  என ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடமையின் போது உயிர்நீத்த நிலையில் இன்று நாம் அஞ்சலி செலுத்தும் நற்பணியாளர்களை கௌரவிக்கும் அவலங்களை எதிர்கொள்வோருக்கு விரைந்து உதவி செய்யும் மகோன்னத பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் முயற்சிகளை கொண்டாடுவதற்கும் இதுவே சிறந்த வழியாகும்.

இத்தகைய ஊக்கம் தரும் முயற்சிகளை சித்தரிக்கும் ஒருமைப்பாட்டின் உயிரோட்டமானது உலக மனிதாபிமான வழிநடத்திச் செல்கின்றது. உதவிகளை நாடுவோருக்கு உதவி செய்வதற்காக தமது சொந்த இல்லத்தின் சுகங்களை துறந்து செல்லும் நிவாரணப் பணியாளர்களை சந்திக்க வழிவகுத்த வெளிநாட்டு பயணங்களில் இத்தகைய உயிரோட்டத்தை உணர்ந்திருக்கின்றேன். ஒரு தனி நபரின் செயல் சிறியதாக தோன்றலாம். அந்தச் செயல்கள் ஒன்றாக சேர்ந்தால் அவை உலகம் முழுவதிலும் எதிரொலித்து சிறந்ததொரு எதிர்காலத்திற்குரிய நிறுத்த முடியாத அலையாக மாறும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.        

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X