2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பாவனையாளர் அதிகார சபையினால் காலாவதியான பொருட்கள் மீட்பு

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜனி)


பாவனையாளர் அதிகார சபையினால் வேலணை மற்றும் புங்குடுதீவு பகுதியில் காலாவதியான பொருட்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் போன்றன வர்த்தக நிலையங்களில் மீட்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என்.சிவசீலன் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பாவனையாளர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது குறித்த வர்த்தக நிலையங்களில் கடந்த மாதம் முதல் சோடா, சீனி, பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பாவனையாளர் அதிகார சபையின் தண்டனை சட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களை நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் பாவனையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X