2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மரபணு பரிசோதனைக்காக பெறப்பட்ட இரத்த மாதிரிகள் மாற்றீடு செய்யப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பு

Super User   / 2012 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

மரபணு பரிசோதனைக்காக பெறப்பட்ட, பெண்ணொருவரினதும் குழந்தையொன்றினதும் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்படாமல் மாற்றப்பட்டதாக கூறி, யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் இன்று தெரிவித்தார்.

புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். 2010 ஆம் ஆண்டு  மரபணு பரிசோதனை மேற்கொள்வதற்கு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டபோது பரிசோதனைக்காக இரத்த மாதிரிகள் பெறப்பட்டதாகவும் ஆனால் அவை சிற்றூழியர் ஒருவராலும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவராலும் மாற்றப்பட்டதாககவும் மேற்படி இரத்த மாதிரிகள்  பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை எனவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.   அத்துடன் 12,500 ரூபா பணம் காணாமல் போனதாகவும் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இம் முறைப்பாட்டின் அடிப்படையில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம் முதற் கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக   இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட பிராந்திய இணைப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக, மேற்படி பெண் கூறுகையில், "மரபணு பரிசோதனைக்காக எடுக்கபட்ட இரத்தம் மாற்றப்பட்டமை தொடர்பாக பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் எனக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை. இதனால் நானும், எனது குழந்தையும்  சமுதாயத்தில் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றோம். இதற்கான தீர்வு எனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நான் மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடினேன்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X