2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழில் காச நோய் அதிகரிப்பு: வைத்திய நிபுணர் யமுனானந்தா

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 21 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

யாழ். மாவட்டத்தில் இன்றுவரை 200 பேர் காசநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாகவும் இவர்களில் 20 வீதமானவர்கள் சலரோகத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக காசநோய் வைத்திய நிபுணர் எஸ்.யமுனானந்தா இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

கடந்த மாதத்தில் மட்டும் 180 பேர் காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 40இற்கு மேற்பட்டவர்கள் சலரோகத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளமை அறியப்பட்டுள்ளது.

காசநோய்க்கான சளி பரிசோதனை மேற்கொள்ளும்போது சலரோக நோய்க்கான பரிசோதனைகளையும் காசநோயாளி மேற்கொள்வது அவசியமெனவும், அண்மைக்காலங்களில் காசநோய் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே குறைவடைந்து செல்கின்ற காரணத்தினால் காசநோய் திடீரென அதிகரித்துக் காணப்படுகின்றதாகவும் காசநோய் வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X