2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'ஜுலை மாதக் கொடுப்பணவுகள் இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும்'

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)

வட மாகாண அரச போக்குவரத்து ஊழியர்களுக்குரிய ஜுலை மாதக் கொடுப்பணவுகள் இம்மாதம் 23 ஆம் திகதிக்குள் வழங்கப்படும் என்று வடபிராந்திய போக்குவரத்து முகாமையாளர் எஸ்.அஸ்கர் தெரிவித்துள்ளார்.

வட மாகாண அரச போக்குவரத்து ஊழியர்களின் 3,7,8 ஆம் மாதச் சம்பளங்கள் அடுத்த மாதம் 8 ஆம் திகதிக்குள்; வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் 12 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக வட மாகாண அரச போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிராந்திய முகாமையாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

8 ஆம் மாதத்திற்குரிய சம்பளம் 8 ஆம் மாதம் முடிவடைந்த பின்னர் வழமைபோன்று வழங்கப்படும் என்றும் தெரிவித்த அவர் 3 ஆம் மாதச் சம்பளத்தில் 29 இலட்சம் ரூபா நிலுவையில் உள்ளதாக ஏற்றுக்கொண்டார்.

வடபிராந்திய போக்குவரத்து முகாமையாளராக தான் இவ்வருடம் ஏப்ரல் மாதம் பதவியை ஏற்கும் போது 139 இலட்சம் ரூபா சம்பளப் பணம் நிலுவையில் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர் தற்போது 29 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குறித்த 29 லட்சம் ரூபா நிலுவைச் சம்பளப் பணமும் அடுத்த மாத நடுப்பகுதிக்கு முன்னர் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X