2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யாழில் கடற்கரை பகுதிகளை ஆழமாக்குவதற்கு நடவடிக்கை

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 20 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(த.சுமித்தி)

தொண்டமனாறு தொடக்கம் கற்கோவளம் வரையான கடற்கரை பகுதிகளை ஆழமாக்குகுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் யாழ். மாவட்ட திட்டப்பணிப்பாளர் சுதர்சன், வடமராட்சி கடற்றொழிலாளர் சங்க சமாசங்களின் தலைவர் அருளானந்தம் மற்றும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் எமிலியாம்பிள்ளை ஆகியோர் இப்பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

கடற்கரை பகுதிகளை செப்பனிடுவதற்காக கடற்கரை பகுதியின் ஆளம், அகலம் என்பவற்றை கணிப்பிட்டதுடன், செப்பனிடுவதற்கு பல மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதனால் அதிகாரிகளிடம் தீர்மானித்து அறிக்கை சமர்ப்பிப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் யாழ். மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X