2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

இந்திய இழுவை படகின் அத்துமீறலை எதிர்த்து யாழில் கண்ட பேரணி

Super User   / 2012 நவம்பர் 26 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

இந்திய இழுவைப் படகின் ஆக்கிரமிப்பை எதிர்த்து யாழில் மாபெரும் கண்ட பேரணி ஒன்றினை நடாத்த தீர்மானித்துள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அ.எமிலியாம் பிள்ளை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"யாழ். மாவட்டத்தின் கடற் பகுதிகளில் இழுவைப் படகுகளின் ஆக்கிரமிப்பால் மீனவர்களின் கடற்றொழில் உபகரணங்கள் பாரிய சேதத்துக்கள்ளாக்கபடுவதுடன் கடல் வாழ் உயிரினங்களும் வளங்களும் அழிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக இந்திய இலங்கை அரசாங்களிடம் பல தடவைகள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் இன்று வரை உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் ஒன்று சேர்ந்து எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் இப்பேரணியை நடாத்த தீர்மரித்துள்ளோம்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X