2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பட்டதாரி பயிலுனர்களுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நியமனம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ் மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களை அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைந்துக் கொள்ளப்படுவதற்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது.

யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பாராம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கிவைத்தார்.

யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றி வந்த 514 பேருக்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பாராம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம், வடமாகாண செயலாளர் மற்றும் திணைக்களத்தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X