2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

அசிட் வீச்சுக்கு குடும்ப பிரச்சினையே காரணம்: பொலிஸ்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

காணிப் பிரச்சினை காரணமாகவே அசிட் ஊற்றப்பட்டதாக மகேஸ்வரனின் சகோதரனும் ஈஸ்வரன் ரேடர்ஸ் நிறுவன உரிமையாளருமாகிய துவாரகேஸ்வரன், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் என யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லூர் பகுதியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக பயணித்த ஜீப் வண்டியின் கதவைத் திறக்கும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் முதுகில் அசிட் ஊற்றி விட்டு தப்பியோடியதாகவும், அசிட் ஊற்றியவரை தனக்கு தெரியுமென்றும் அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக யாழ். பொலிஸார் கூறினர்.

இதன்போது, பொலிஸ் நிலையத்தில் துவாரகேஸ்வரனின் சகோதரி மற்றும் தந்தையாரிடம் இவ்விடயம் குறித்து வினவியபோது, குடும்ப பிரச்சினையே இச்சம்பவத்துக்கு காரணம் என கூறினர். யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X