2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 15 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினரால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை யாழ். வேலணை மற்றும் வீமன்காமம் பகுதிகளில் இடம்பெற்றன.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில நடைபெற்ற இந்நிகழ்வில், வேலணை மற்றும் தெல்லிப்பளை வீமன்காமம் பகுதியில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள 150 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, தலா ஒருவருக்கு 2500 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்களை இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜகத் அபேசிங்க வழங்கி வைத்தார்.

இதனடிப்படையில், வேலணை பிரதேசத்தில் உள்ள 45 மாணவர்களுக்கு வேலணை மத்திய கல்லூரியிலும் தெல்லிப்பளை வீமன்காமம் பிரதேசத்தின் 105 மாணவர்களுக்கு வீமன்காமம் மகா வித்தியாலயத்திலும் வைத்து உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், அதிபர் ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் செஞ்சிலுவைச் சங்க உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X