2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழ். இந்து மாணவர்கள் சிங்கராஐவனத்தில் பறவைகள் ஆய்வு

Kogilavani   / 2013 மார்ச் 22 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-லேனுஜா


யாழ்ப்பாண இந்துக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் சிறுவர் மகிழ்வக இணைப்பாளர் ஆகியோர் சிங்கராஐவனத்தில் பறவைகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த ஆய்வினை, இலங்கை கள பறவையியல் குழு மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வு, டில்மா கென்சவேசனின் அனுசரணையுடன் தொண்டைமானாறு வெளிக் கள நிலையம் ஆகியவற்றின் பங்களிப்புடன் சிறுவர் மகிழ்வகத்தினர்; ஒழுங்குபடுத்தியுள்ளனர்.

சிங்கராஐவனத்தில் நடைபெற்ற 'இயற்கை மற்றும் பறவைகள் ஆய்வு முகாமில்' ஒன்பதாவது பாடசாலையாக யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் கலந்துகொன்டனர். 

இவ் ஆய்வு முகாமிணை கொழும்பு பல்கலைக்கழக, இலங்கை கள பறவையியல் குழுவின் காப்பாளரும் இலங்கை விஞ்ஞான சங்க தலைவரும் கொழும்பு பல்கலைக்கழக விலங்கியல் துறை போராசிரியருமான போராசிரியர் சரத் கொட்டகம நெறிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X