2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

விடுதிகளில் விபசாரம் நடைபெறுவதாக முறைப்பாடு கிடைத்தால் நடவடிக்கை: எஸ்.எஸ்.பி

Kogilavani   / 2013 ஏப்ரல் 05 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'யாழ். மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் விபசாரம் நடைபெறுவதாக   முறைப்பாடுகள் கிடைத்தால் அவ்விடுதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியும்' என யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.டிம் ஜெவ்ரி இன்று தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்  ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதலிளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

'யாழ். கோவில் வீதியில் விபசார நடவடிக்கையில் ஈடுபடுவதாக எமக்கு தகவல் கிடைக்கவில்லை.  யாழ். மாவட்டத்தில் பதிவு செய்யாது விடுதி நடத்தப்படும் இடங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்டு விடுதி நடத்தும் இடங்களில் விபசாரம் நடைபெறுகின்றதாக எமக்கு முறைப்பாடு கிடைத்தால், அம் முறைப்பாட்டினை பரிசீலணை மேற்கொண்டு விபசாரம் நடக்கும் இடத்தினை முற்றுகையிடுவதுடன் விபசார நடவடிக்கையில் ஈடுபடுபவர்களையும் கைதுசெய்தவற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X