2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

யாழில் வடகடல் நிறுவனத்தின் வலைத்தொழிற்சாலை திறப்பு

Suganthini Ratnam   / 2013 மே 06 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்
,சுமித்தி தங்கராசா, கு.சுரேன்

இந்திய அரசாங்கத்தின் 166 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வடகடல் நிறுவனத்தின் வலைத்தொழிற்சாலை யாழ். குருநகர் பகுதியில் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் உள்ள கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த வடகடல் நிறுவனத்திற்கு 166 மில்லியன் ரூபாவை இந்திய அரசாங்கம் வழங்கியிருந்தது.

கடந்த காலத்தில் இந்த வடகடல் நிறுவனத்தின் மூலம் 60 மெற்றிக்தொன் வலை உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளதாகவும் தற்போது 300 மெற்றிக்தொன் வலை உற்பத்தி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வடகடல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே.காந்தா, யாழ.; இந்திய துணைத்தூதுவர் வே.மகாலிங்கம், வடமாகாண ஆளுநர்; ஜி.ஏ.சந்திரசிறி, யாழ். அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X