2025 ஜூன் 18, புதன்கிழமை

பசில் ராஜபக்ஷ யாழ். விஜயம்

Menaka Mookandi   / 2013 மே 10 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, விரைவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, யாழ். மாவட்ட செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழான அதிகாரிகளுடன் அமைச்சினால் நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயும் போதே மேற்கண்டவாறு தொவித்தார்.

அத்துடன், யாழ். மாவட்டத்தில் கட்டிட வேலைகளில் தாமதம் இருப்பதை சுட்டிக்காட்டியதுடன் உரிய நேரத்தில் வேலைகளை நடைமுறைப்படுத்துமாறும் அப்போதுதான் மேலதிகமான வேலைகளை இலகுவாக செய்யமுடியுமென்றும் உள்ளூர் உற்பத்தி பொருட்களை மாதாந்தம் விற்பனை செய்வதற்கான சந்தை வாய்ப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .