2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பல்கலைக்கழக கல்லூரிக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்,சுமித்தி தங்கராசா


யாழ்ப்பாண பல்கலைக்கழகக் கல்லூரிக்கான அடிக்கல் இன்று திங்கட்கிழமை நாட்டிவைக்கப்பட்டுள்ளது.

மஹிந்த சிந்தனையின் கீழ் நாடு பூராகவும் அமைக்கப்படவுள்ள 25 பல்கலைக்கழக கல்லூரிகளின் 6ஆவது கல்லூரியாக இது யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ளது.

115 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ். பல்கலைக்கழகக் கல்லூரியில்  50 பாடநெறிகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், ஏனைய கல்லூரிகளில் இல்லாத 26 பாடநெறிகள் யாழ். பல்கலைக்கழக கல்லூரியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ். தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில்; இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் விருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா,  நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திகுமார், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, தொழிநுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .