2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யாழில் பொலிஸ் வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

யாழில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றை  தீர்க்கச் சென்ற பொலிஸ் வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் யாழ்.நாயன்மார்கட்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) இரவு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

யாழ்.பாசையூர்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மதுபோதையில் நாயன்மார்கட்டு இளைஞர்களுடன் தகராரில் ஈடுபட்டுள்ளார்.

இந்த தகராறு முற்றி இரு குழுக்களுக்கிடையிலான மோதலாக மாறியதில், இருவர் படுகாயமடைந்த நிலையில்
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் பொலிஸ் அவசர சேவை 119 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸார் வாகனத்தில் சென்றுள்ளனர்.

இந்நிலையில் மோதலில் ஈடுபட்டவர்களினால் பொலிஸ் வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் பொலிஸாரின் வாகனம் பலத்த சேதமடைந்ததுடன், பொலிஸார் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையென யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் ஐவரை  தாம் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .