2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சந்தேகநபர்கள் ஐவரையும் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த வேண்டும்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

யாழில் பொலிஸ் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரையும் அடையாள அணிப்பில் ஈடுபடுத்துமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் இன்று (9) தெரிவித்துள்ளனர்.

நாயன்மார்கட்டு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (6) இரு குழுக்களிடையில் இடம்பெற்ற கைகலப்பினை தடுப்பதற்காக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து, யாழ். பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் ஐந்து பேரை கைதுசெய்து நேற்று செவ்வாய்க்கிழமை (8) யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேற்படி சந்தேக நபர்களை 7 நாட்களுக்கு விளக்கமறியலில் வைத்து, அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .