2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக பனைமரங்கள் தறித்ததாக முறைப்பாடு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா 

யாழ். உடுவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் பனை மரங்கள் தறிக்கப்பட்டுள்ளதாக  சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அந்தப் பகுதி கிராம அலுவலகர் நேற்று புதன்கிழமை  முறைப்பாடு செய்துள்ளார்.

உடுவில் தெற்கில் உள்ள காணி ஒன்றில் நின்ற 15 பனை மரங்களையும் முன் அனுமதி பெறாது தறிக்கப்படுவதை அவதானித்த பனை அபிவிருத்திச் சபையின் ஊழியர் ஒருவர், இது தொடர்பில் அந்தப்பகுதி கிராம அலுவலகருக்கு தகவல் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து கிராம அலுவலகர் சென்று பார்த்தபோது, குறித்த காணியிலிருந்த அனைத்துப் பனை மரங்களும் தறிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் மேற்படி கிராம அலுவலகர் முறைப்பாடு  செய்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .