2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மானிய விலையில் உருளைக்கிழங்கு விதைகள்

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 11 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். மாவட்டத்தில் உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு மானிய விலையில் உருளைக்கிழங்கு விதைகள் வழங்கப்படவுள்ளன.

யாழ்.மாவட்டத்தில் உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களுக்காக பிரதேச ரீதியில் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் சங்கங்கள் அமைக்கப்பட்டு உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நுவரொலியாவிலிருந்து எடுத்து வரப்படவுள்ள உருளைக்கிழங்கு விதைகள் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் சங்கங்கள் மூலம் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படவுள்ளன.

இதற்கான நடவடிக்கைகளை விவசாயத் திணைக்களமும், உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் சங்கமும் மேற்கொண்டு வருவதாக விவசாய திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .