2025 ஜூன் 23, திங்கட்கிழமை

அமெரிக்க தூதுவர் - விக்னேஸ்வரன் சந்திப்பு

Super User   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே.சிசனிற்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

ஒரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்க தூதுவர் இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார். இதன்போதே வட மாகாண முதலமைச்சரை சந்தித்து  அவர் பேச்சு நடத்தியுள்ளார்.

வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அமெரிக்க தூதுவருடன் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .