2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காக ஆணைக்குழு: சி.வி.

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 18 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடமாகாண முஸ்லிம்களுக்காக ஆணைக்குழுவொன்று உருவாக்கப்பட்டு அந்தக் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மூலம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தீர்வு காணப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபை உறுப்பினரும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான ஜஸ்மின் ஆயுப், மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான  சந்திப்பு யாழ். பொதுநூலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது  வடமாகாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என  யாழ். மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களின் வாழ்வாதார முன்னேற்றங்கள் தொடர்பில் ஆணைக்குழுவொன்றை  உருவாக்கி அதன் மூலம் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் வடமாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.

இவ்வாறு உருவாக்கப்படும் ஆணைக்குழுவில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இணைப்பாளர்கள் 5 பேர்  கடமையாற்றுவார்கள் என்பதுடன், அவர்கள் முன்வைக்கும் பரிந்துரைகள் கவனத்தில் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

  Comments - 0

  • nawshad mohammed Monday, 18 November 2013 04:52 AM

    காலம் தாழ்த்தும் முயற்சி

    Reply : 0       0

    Ash Monday, 18 November 2013 12:13 PM

    நான் முதலமைச்சர் அவர்களை மதிக்கின்றேன், அவர் ஒரு நீதியரசராக இருந்தவர். மக்கள் நிம்மதியாக வாழ குரோதங்கள் அகற்றப்பட வேண்டும். நிச்சயம் இரு இனங்களையும் இணைத்து செயற்பட வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .