2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யுவதியை கடத்த முயன்ற கும்பல் கைது

Menaka Mookandi   / 2013 நவம்பர் 18 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


இராசாவின் தோட்ட வீதியில் யுவதியொருவரை கடத்த முற்பட்ட வான் ஒன்றை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், கடத்தல்காரர்களையும் வானையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்று 12 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் வானில் வந்த சிலர் வீதியில் சென்றுகொண்டிருந்த யுவதியொருவரின் கையைப் பிடித்து வானிற்குள் ஏற்றுவதற்கு முற்பட்டதை அவதானித்த அப்பகுதி மக்கள் வானினைச் சுற்றி வளைத்து வானில் இருந்தவர்களையும் பிடித்தனர்.

தொடர்ந்து அவ்விடத்திற்கு வந்த யாழ். பொலிஸார் வானையும் மேற்படி கடத்தலில் ஈடுபட்ட நபர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .