2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இறைவரித் திணைக்கள யாழ். அலுவலகத்தின் பொன்விழா

Menaka Mookandi   / 2013 நவம்பர் 18 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று திங்கட்கிழமை (18) நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது.

இறைவரித் திணைக்களத்தின் யாழ்.பிராந்திய பிரதி ஆணையாளர் பா.சிவாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் திருமதி மல்லிகா சமரசேகர கலந்துகொண்டார்.

யாழ்.மாவட்டத்தில் ஒழுங்காக வரி செலுத்தி வந்த 50 பேர் இந்நிகழ்வில் வைத்து கௌரவிக்கப்பட்டதுடன், பாடசாலை மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் உரையாற்றிய யாழ். பிராந்திய பிரதி ஆணையாளர் பா.சிவாஜி கூறுகையில்,

'யாழ். மாவட்டத்தில் ஆரம்பத்தில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 8 வீதமாகவிருந்து தற்போது 18 வீதமாக உயர்வடைந்துள்ளது. இது எதிர்காலத்தில் 30 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும்' அவர் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தின் வர்த்தக நிலைமை தற்போது மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது. வர்த்தகர்களின் வர்த்தக நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்கு திட்டமிடலுடன் கூடிய செயற்பாடுகள் மிக அவசியம் என்றும் அதற்கு யாழ்.மாவட்ட வர்த்தக சங்கம் வர்த்தகர்களுக்கு உதவிகள் புரிய வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .