2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அளவெட்டி லியோக் கழகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

Kogilavani   / 2013 நவம்பர் 21 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


அளவெட்டிப் பகுதிக்கான புதிய லியோக் கழகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு அளவெட்டி அருணோதயா கல்லூரியில் புதன்கிழமை (20) நடைபெற்றது.

லயன்ஸ்கழக ஆளுநர் லயன் றஞ்சித் பெர்ணான்டோ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அளவெட்டி லியோக்கழக புதிய தலைவராக வில்லியம் ததீஸ் ஜெபரின்தாஸும் செயலாளராக இரத்தினம் பிரகாஸும் பொருளாளராக உஷhநந்தினி முருகையாவும் தெரிவு செய்யப்பட்டனர்.

புதிய லியோகழகத்தின் முதற் செயற்பாடாக அளவெட்டிக் கிராமத்திலுள்ள  வறிய குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மானிப்பாய் வட்ட லயன்ஸ் கழகத்தின் துணைக்கழகமாக அளவெட்டி  லியோ கழகம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .