2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கூட்டமைப்பின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

Super User   / 2013 நவம்பர் 21 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வலி. கிழக்கு பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக ஒரு வாக்கினால் தோல்வியடைந்துள்ளது.

பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமரால் சபையில் இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு இடம்பெற்றபோது 10 பேர் எதிராகவும் ஒன்பது பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர். இதனால் மேலதிக ஒரு வாக்கினால் தோல்வியடைந்துள்ளது.

இந்த வரவு செலவுத்திட்டம் சபை உறுப்பினர்களின் ஆலோசனைகளை கருத்திற்கொள்ளாமல் தன்னிச்சையாக தயாரிக்கப்பட்டமையினாலேயே இதனை தாம் நிராகரித்ததா பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .