2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கொள்ளையடித்த நபர் மக்களால் மடக்கிப் பிடிப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 22 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே. பிரசாத், சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு இருட்டு மடுப்பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் கொள்ளையிட்ட ஒருவரை அப்பகுதி மக்கள்; மடக்கி பிடித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

முல்லைத்தீவு உடையார் கட்டு கிராம அலுவலருக்குட்பட்ட இருட்டு மடு கிராமத்தில் நேற்றிரவு வியாழக்கிழமை (21) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நபர் ஒருவர் பிள்ளையார் ஆலயத்திலுள்ள விக்கிரகங்கள் மற்றும் மணி, தீபங்கள், குத்துவிளக்குகள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து செல்வதை அப்பகுதி மக்கள் அவதானித்ததையடுத்து குறித்த நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேற்படி சந்தேக நபர் முல்லைத்தீவு மாங்குளத்தை சேர்ந்தவர் எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .