2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஆயுள்வேத வைத்தியர்களுக்கு தண்டம் விதிப்பு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 24 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

ஆங்கில மருந்து வகைகளை பயன்படுத்திய ஆயுள்வேத வைத்தியர்கள் மூவருக்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதியினால் தலா 20 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

உடுவில் பிரதேச சுகாதார வைத்தியதிகாரியின் தலைமையில் கடந்த வாரம் கோப்பாய், சண்டிலிப்பாய், நல்லூர் உள்ளிட்ட பிரதேசங்களின் சுகாதார வைத்தியதிகாரிகள் இணைந்து திடீர் பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன் போது, மேற்படி ஆயுள்வேத வைத்தியர்கள் ஆங்கில மருந்து வகைகள் பயன்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (22) குறித்த ஆயுள்வேத வைத்தியர்கள் நீதிமன்றத்திற்கு சமூகமளித்ததைத் தொடர்ந்து குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .