2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

யாழில் பாதீனியச் செடிகளை அழிக்க விவசாய அமைச்சர் நடவடிக்கை

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்.மாவட்டத்தின் வயல்கள், தோட்டங்களில் அதிகமாகப் பரவியிருக்கும் பாதீனியச் செடிகளை (நச்சுச்செடி) அழிக்கும் நடவடிக்கைகளை பிரதேச செயலக ரீதியில் மேற்கொள்வதற்கு வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் நடவடிக்கை  எடுத்துள்ளார்.

இதனடிப்படையில், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட விவசாய நிலங்களில் பாதீனியச் செடிகளை அழிக்கும் நடவடிக்கை நாளை ஞாயிற்றுக்கிழமை (01) மேற்கொள்ளப்படவுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த நடவடிக்கையினை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், இந்நிகழ்வில், வட மாகாண சபை உறுப்பினர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயத்திணைக்களங்களின் அலுவலர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
பாதீனியச் செடிகள் பெருமளவில் வயல் நிலங்களிலும் தோட்டக் காணிகளிலும் வளர்வதினால் விவசாயப் பயிர்ச் செய்கைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் அடிக்கடி முறைப்பாடு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .