2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

சட்ட நடைமுறைகள் ஊடாக தொழில் முயற்சியை வெற்றிகரமாக முன்னெடுத்தல்: செயலமர்வு

Kogilavani   / 2014 பெப்ரவரி 17 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.வர்த்தக தொழிற்துறை மன்றத்தினதும் இலங்கை பணிப்பாளர் தனியார் நிறுவனத்தினதும் ஏற்பாட்டில் 'சட்ட நடைமுறைகள் ஊடாக தொழில் முயற்சியை வெற்றிகரமாக முன்னெடுத்தல்' தொடர்பான செயலமர்வு யாழ்.கிறீன்கிறாஸ் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்றது. 

இச்செயலமர்வில், இலங்கை பணிப்பாளர் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் பகீர் சமரசிங்க மற்றும் நிர்வாக இயக்குநர் நிலானி பெரேரா ஆகியோர் இணைந்து கருத்துரைகளை வழங்கினர்.

கம்பனிகளின் சட்ட பூர்வ தன்மைகள், கம்பனிகளில் கடைப்பிடிக்க வேண்டி அடிப்படை தேவைகள், அவற்றின் நிதிக்கணக்கீடு, வரி முறைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இச்செயலமர்வில் விளக்கமளிக்கப்பட்டன.  

இச்செயலமர்வில் சுமார் 100 இற்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X