2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மரத்திலிருந்து விழுந்தவர் மரணம்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 19 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், கைதடி கிழக்கினைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நாகன் செல்வரட்ணம் (வயது 49) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி குடும்பஸ்தரின் வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு உணவளிப்பதற்காக வீட்டுத் தோட்டத்திலுள்ள வேப்ப மரத்தில் ஏறியுள்ளார்.

இதன்போது, அவர் நின்றுகொண்டிருந்த மரக்கொப்பு முறிந்ததில் அவர் கீழே விழுந்துள்ளார். இதனால் அவரது தலையில் பலத்த அடிபட்டுள்ளது. இதனாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று மரண விசாரணைகளின் போது தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X