2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழில் இரு விடுதிகள் முற்றுகை; எண்மர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 02 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ். மாநகரசபையின் அனுமதி பெறாமல்; யாழ். அரியாலை ஆனந்தன் கடை வீதியில் இயங்கிவந்த விடுதியையும் யாழ். அம்மன் வீதியில் இயங்கிவந்த மசாஜ் நிலையத்தையும்  ஞாயிற்றுக்கிழமை (02) முற்றுகையிட்ட பொலிஸார், சந்தேகத்தின் பேரில் 08 பேரை கைதுசெய்ததாகவும்  யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 05 பெண்கள் அடங்குவதாகவும் பொலிஸார் கூறினர்.

யாழ். அரியாலை ஆனந்தன் கடை வீதி விடுதி முகாமையாளருடன் 03 பெண்களும்; ஆண் ஒருவரும்  கைதுசெய்யப்பட்டனர்.  இதேவேளை, யாழ். அம்மன் வீதி மசாஜ் நிலைய முகாமையாளருடன் 02 பெண்களையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர். 

வடமாகாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொஹான் டயஸின் உத்தரவுக்கமைய சென்ற பொலிஸ் குழுவினர் இம்முற்றுகையை மேற்கொண்டனர்.

இம்முற்றுகை நடவடிக்கையில் பொலிஸாருடன் இணைந்து வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தன் உள்ளிட்டவர்களும் ஈடுபட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .