2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

'கிராமிய சிவில் பாதுகாப்பு குழுவினை பலப்படுத்தல்' தொடர்பான கூட்டம்

Kogilavani   / 2014 மார்ச் 07 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


சொர்ணகுமார் சொரூபன், சுமித்தி தங்கராசா


'கிராமிய சிவில் பாதுகாப்பு குழுவினை பலப்படுத்தல்' தொடர்பான கூட்டம் நீராவியடி இலங்கைவேந்தன் கலா மன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றது.

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதம விருந்தினராக வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர கலந்துகொண்டார்.

இந்த சிவில் கூட்டத்தில் யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையத்தின் கீழ் உள்ள 273 கிராம சேவையாளர் பிரிவினைச் சேர்ந்த 6825 சிவில் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, யாழ். மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பினை பலப்படுத்தி களவு, கொலை, கொள்ளை, இலஞ்ச ஊழல்கள் என்பவற்றினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் சிவில் பாதுகாப்பு குழுவினர் திறமையாக செயற்படுதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில்  யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொகான் டயஸ், யாழ். பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சமன்சிகேரா, 51ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் அபேயரத்ன, யாழ். மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், இராணுவ அதிகாரிகள், கிராம சேவையாளர்கள உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .