2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

துவிச்சக்கர வண்டிகளுக்கு 'ஒளித்தெறிப்பு வர்ணம்'; பூசப்படுகின்றது

Kogilavani   / 2014 மார்ச் 13 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள அனைத்து துவிச்சக்கர வண்டிகளுக்கும் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் வைத்து 'ஒளித்தெறிப்பு வர்ணம்' பூசும் நடவடிக்கை புதன்கிழமை (13) முன்னெடுக்கப்பட்டது.

இந்த வர்ணம் பூசும் நடவடிக்கையினை அச்சுவேலிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.என்.கே.ஜெயசிங்க ஆரம்பித்து வைத்தார்.

'துவிச்சக்கர வண்டிகள் வைத்திருப்பவர்கள் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஒளித்தெறிப்பு வர்ணத்தை பூசிச் செல்லுங்கள்' என தமது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் அச்சுவேலிப் பொலிஸார் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்து இந்த வர்ணம் பூசும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

அச்சுவேலி பகுதியில் கடந்த வாரங்களில் விபத்துக்கள் குறைவாக இருப்பதுடன், அவ்விபத்துக்களை மேலும் குறைக்கும் முகமாக துவிச்சக்கர வண்டிகளுக்கு வர்ணப்பூச்சு பூசுதல் நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .