2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தாக்குதல்; இருவர் வைத்தியசாலையில்

Kogilavani   / 2014 மார்ச் 18 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். கோப்பாய் ஆசாரி வீதியைச்சேர்ந்த 22 வயதுடைய நபரொருவரின் தாக்குதலுக்கு இலக்கான அவரது தந்தையும் பெரியதந்தையையும் யாழ்.போதனா வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (18) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை கேமராசா (40), சின்னத்துரை செல்லத்துரை (56) என்பவர்களே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த நபர் திங்கட்கிழமை இரவு (17) போதை பொருளை உண்ட நிலையில் வீட்டில் வந்து உறங்கியுள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை 4 மணியளவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தனது தந்தையை மண்வெட்டியாலும் பெரியதந்தையை கத்தியாலும் வெட்டிவிட்டு தலைமறைவாகியுள்ளார். 

இரண்டு முறை திருமணம் செய்துள்ள குறித்த நபர் ஏற்கனவே பல குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு 5 தடவைகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .