2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'திருவள்ளுவரும் சைவசித்தாந்தமும்' உரை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

யாழ். கந்தர்மடத்திலுள்ள  சிவகுருநாதபீடம் வேதாந்தமடத்தில் புதன்கிழமை (23)  'திருவள்ளுவரும் சைவசித்தாந்தமும்'  என்ற தலைப்பில் உரை இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் சைவ மகா சபையில் நடத்தப்பட்ட தமிழ் அருட்சுனைஞர் பயிற்சிநெறிக்காக இந்தியாவின்  தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்த செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பே.சத்தியவேல் முருகனார் என்பவர் இந்த உரையை நிகழ்த்தவுள்ளார்.

இவர் செவ்வாய்க்கிழமை (22) 'சைவசித்தாந்தம்'; தொடர்பாக உரையாற்றினார். இதன் இறுதி உரை இன்றையதினம் நடைபெறவுள்ளது.

இதில் யாழ். பல்கலைக்கழகம் மற்றும் க.பொ.த. உயர்தரத்தில்  இந்துநாகரிகத்தை கற்கும் மாணவர்களும் நலன் விரும்பிகளும் பங்குபற்றி பயனடைய முடியுமென சைவ மகா சபை தெரிவித்துள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .