2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வடமாகாண சபையில் பணியாற்ற மேலதிக அரசாங்க அதிபர்கள் மறுப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 29 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுமித்தி தங்கராசா

பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சினால் வடமாகாண சபையில் கடமையாற்றும்படி விடுக்கப்பட்ட வேண்டுகோளினை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள் மறுத்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் மற்றும் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி மோகன சரஸ்வதி ஆகியோருக்கு வடமாகாண சபையில் கடமையாற்றும் படி பொதுநிர்வாக அலுவல்கள் அமைச்சினால் திங்கட்கிழமை(28) கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இருந்தும், இவர்கள் இருவரும் இலங்கை நிர்வாக சேவைகள் தரம் 1 தரத்தில் இருப்பதினால் வடமாகாண சபையில் அந்த தரத்தில் வெற்றிடங்கள் இல்லையென்பதினால் இந்த வேண்டுகோளினை மறுத்துள்ளனர்.

அத்துடன், தமது மறுப்புத் தொடர்பான கடிதத்தினையும் இன்றே பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சிற்கு அனுப்பியுள்ளதாக ரூபினி வரதலிங்கம் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .