2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

உழவர் சந்தை திறப்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கி.பகவான் 


யாழ். சாவகச்சேரி நகரசபையால் 08 இலட்சம் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட உழவர் மரக்கறிச் சந்தை  புதன்கிழமை (30) காலை சாவகச்சேரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகரசபைத் தலைவர் இ.தேவசகாயம்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் மற்றும் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி அதிபர் க.அருந்தவநாதன் இணைந்து சந்தையைத் திறந்துவைத்தனர்.

இச்சந்தையில் மரக்கறி உற்பத்தியாளர்கள் சந்தைப்படுத்தும்  மரக்கறிகளை, வியாபாரிகளும் நுகர்வோரும் கொள்வனவு செய்ய முடியும் என நகரசபைத் தவிசாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .