2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இருவேறு விபத்துக்களில் நால்வர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 மே 01 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை (30) இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் படுகாயமடைந்த நால்வர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எழுதுமட்டுவாள் சந்தியில் கூலர் வாகனமொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும்  நேருக்குநேர் மோதியதால், ஆவரங்கால் சர்வோதயா வீதியைச் சேர்ந்த சிவபாலசிங்கம் தனபாலசிங்கம் (வயது 50) அவரது மனைவியான தனபாலசிங்கம் உமா (வயது 47) ஆகிய இருவரும்  படுகாயமடைந்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சாவகச்சேரி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்குநேர் மோதியதால், சாவகச்சேரி டச்சு வீதியைச் சேர்ந்த கந்தசாமி முருகையா (வயது 55), மட்டுவில் வடக்கைச் சேர்ந்த சின்னத்துரை நிஸாந்தன் (வயது 26) ஆகிய இருவரும் படுகாயமடைந்ததாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .