2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

விபத்தில் படுகாயமடைந்தவர் தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவு

Kogilavani   / 2014 மே 01 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கி.பகவான்

கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்னிறி உயிரிழந்தவர்  தொடர்பாக விசாரணைகளை நடத்தி நீதிமன்றில் அறிக்கை சமர்பிக்குமாறு கொடிகாமம் பிரிவு திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.இளங்கீரனுக்கு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் புதன்கிழமை (30) உத்தரவிட்டார்.

கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (30) உயிரிழந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

மிருசுவில் வடக்கைச் சேர்ந்த  சின்னத்தம்பி சிவானந்தநாயகம் (55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாரவூர்தியும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த மேற்படி நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .