2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

விபத்தில் மாணவன் மரணம்

Suganthini Ratnam   / 2014 மே 05 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். உரும்பிராய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்கும் உரும்பிராயைச்; சேர்ந்த சந்திரன் ராஜ்கரன் (வயது 19) என்பவர் மரணமடைந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவ்விபத்தில் படுகாயமடைந்த செல்வம் சிந்துஜன் (வயது 20) என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் கூறினர்.

மோட்டார்  சைக்கிளொன்றை  பின்னால் வந்த உழவு இயந்திரம் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற மாணவனே மரணமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த விபத்து தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில்  உழவு இயந்திரச் சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .