2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

விபத்தில் படுகாயமடைந்தவர் மரணம்

Kogilavani   / 2014 மே 07 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  கி.பகவான்

யாழ்.நுணாவில் பகுதியில் முச்சக்கரவண்டியும் கன்ரர் ரக வாகனமும் கடந்த சனிக்கிழமை (03) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முச்சக்கரவண்டி சாரதி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (07) உயிரிழந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

மிருசுவிலினைச் சேர்ந்த கனகலிங்கம் துஸியந்தன் (31) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

விபத்தில் படுகாயமடைந்திருந்த இவர், முதலில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்கான யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இவரது மரணம் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்கும்படி சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை பொலிஸாரிற்கு புதன்கிழமை (07) உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .