2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல் தொடர்பில் செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 மே 09 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}



-சொர்ணகுமார் சொரூபன்


வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு சிறிய, நடுத்தர   முயற்சியாளர்களை ஊக்குவித்தல் என்னும் தொனிப்பொருளில் செயலமர்வு யாழ். ஹற்றன் நஷனல் வங்கியின் கேட்போர்கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்தச் செயலமர்வை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, வடமாகாணத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர  முயற்சியாளர்கள் தங்களின் தொழில் முயற்சிகளை எவ்வாறு வெற்றிகரமாகக் கொண்டு செல்வது, அதன் மூலம் வடமாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ளுதல் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

இந்தச் செயலமர்வில்  யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள வங்கிகளின் முகாமையாளர்கள், தொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .