2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

விறகு கொண்டு சென்றவர் மரணம்

Kogilavani   / 2014 மே 13 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

துவிச்சக்கர வண்டியில் விறகு கட்டிக்கொண்டு சென்றவர் யாழ்.மல்லாகம் மகா வித்தியாலத்திற்கு முன்பாக திங்கட்கிழமை (12) இரவு வீழ்ந்து காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.உரும்பிராய்ப் பகுதியினைச் சேர்ந்த மாணிக்கவாசகர் வசந்தராஜா (62) என்பவரே உயிரிழந்தார்.

வலி.வடக்கு கொல்லங்கலட்டியினைச் சேர்;ந்த மேற்படி நபர் இடம்பெயர்ந்து தற்போது உரும்பிராயில் வசித்து வரும் நிலையில், தனது வீட்டுத் தேவைக்காக விறகு எடுத்துச் செல்லும் வேளையிலே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் தற்போது தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .