2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வலி.வடக்கு மக்களுக்கு வளலாயில் காணிகள்

Kanagaraj   / 2014 மே 14 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வலி.வடக்கில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு வளலாய்ப் (வலி.கிழக்கு) பகுதியில் மாற்றும் காணிகள் வழங்கப்பட்டு, அப்பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

இதற்காக வளலாயில் குடியேறவுள்ள மக்களின், வலி.வடக்கு ஆக்கிரமிப்பு பகுதிகளிலுள்ள காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். அளவீடுகள் செய்யப்பட்டதும் அதற்குரிய நட்டஈடுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டு, அவர்கள் வளலாய்ப் பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள். 

அத்துடன், அவர்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய மாதிரிக் கிராமம் அமைக்கும் வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு யாழ்.மாவட்;டச் செயலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற  கலந்துரையாடலில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .