2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

செந்தமிழில் இந்து ஆலயங்களில் பூசை நடத்த ஏற்பாடு

Kogilavani   / 2014 மே 14 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா


சைவ மகா சபையின் ஏற்பாட்டில், இந்து ஆலயங்களில் செந்தமிழில் பூசை வழிபாடுகளை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் மாதகல் சம்புநாதேஸ்வரத்தில் அமைந்துள்ள சைவ மகாசபையின் மடத்தில் புதன்கிழமை (14) இடம்பெற்றது.

சைவ மகா சபையின் தலைவர் எஸ்.நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வலிகாமம் பகுதிகளைச் சேர்ந்த ஆலயங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலில், அம்பாறை, மட்டக்களப்பு, கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களில் சில ஆலயங்களில் செந்தமிழில் பூசை வழிபாடுகள் இடம்பெறுவதாகவும் பொதுமக்கள் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவில் ஒரு சில ஆலயங்களில் செந்தமிழில் பூசை செய்பவர்களைத் தருமாறு சைவ மகா சபையிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வாழ்வியல் சடங்குகளை நடத்துவதிலும் பெரும் தொகைப் பணத்தை செலவிட வேண்டிய தேவை ஏற்படுவதாகவும், இருந்தும் செந்தமிழில்  பூசை வழிபாடுகளை செய்வதன் மூலம் இத்தகைய வாழ்வியல் சடங்குகளுக்கான தேவையற்ற செலவுகளை குறைக்க முடியும் எனவும் கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .